/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆபத்தான குடிநீர் குழாய் குழி சரி செய்ய மக்கள் கோரிக்கை
/
ஆபத்தான குடிநீர் குழாய் குழி சரி செய்ய மக்கள் கோரிக்கை
ஆபத்தான குடிநீர் குழாய் குழி சரி செய்ய மக்கள் கோரிக்கை
ஆபத்தான குடிநீர் குழாய் குழி சரி செய்ய மக்கள் கோரிக்கை
ADDED : ஜன 01, 2026 04:44 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த குமாரமங்கலம் பஞ்சாயத்து, மேல ஆரியம்-பட்டி கிராமத்தில் பொது குழாய் மூலம் பொதுமக்கள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.
மேல ஆரியாம்பட்டி. தேவஸ்-தானம் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த, 15 நாட்களுக்கு மேலாக தோண்டப்பட்ட குடிநீர் குழாய் குழி சரி செய்யப்படவில்லை. திறந்த வெளியாக குழி இருப்பதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் பைக் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஆபத்தான தோண்டப்பட்ட குழியில் விழுகின்றனர்.மேலும் குழந்தைகள் விளையாடும் போது ஆபத்து காத்திருக்கி-றது. தோண்டப்பட்ட குளியால் உயிர் பலிகள் ஏற்படுவதை தடுக்-கவும், பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கவும் யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.