/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ஜ., தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான கலந்தாய்வு
/
பா.ஜ., தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான கலந்தாய்வு
ADDED : டிச 10, 2024 02:08 AM
குளித்தலை, டிச. 10-
குளித்தலை, அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று சட்டசபை தொகுதிக்கான பா.ஜ., கட்சியின் புதிய ஒன்றிய தலைவர்களை தேர்ந்தெடுத்தல் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பாளராக தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருப்பூர் பாயின்ட் மணி, மாவட்ட பார்வையாளர் ஈரோடு சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்தாய்வு செய்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரி சேதுராமன் கலந்து கொண்டார்.
ஒன்றிய தலைவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான கலந்தாய்வில் குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் (கிழக்கு), குளித்தலை நகரத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள். தீவிர உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.