/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை
ADDED : மார் 18, 2024 03:02 AM
குளித்தலை: குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலக கூட்டரங்கில், நேற்று காலை, 11:00 மணியளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் சுரேஷ் தலைமை வகித்தார். மண்டல துணை தாசில்தார் வைரப்பெருமாள், டவுன் பஞ்., செயல் அலுவவலர்கள் மருதுார் விஜயன், நங்கவரம் காந்தரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், நகராட்சி, டவுன் பஞ்., கிராம பகுதியில் பொது இடங்கள் மற்றும் அரசியல் கட்சி கொடி கம்பம், விளம்பர பேனர், சமுதாயம் சார்ந்த விளம்பரங்களை, வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சி, டவுன் பஞ்., நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து அகற்ற வேண்டும். மேலும், பொதுக்கூட்டம் நடத்துதல், அரசியல் விளம்பரம் செய்யும் விதிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
யூனியன் கமிஷனர் சரவணன், சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஆர்.ஐ., - வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.டி.ஓ., அலுவலக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

