/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம் நடத்த அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
/
எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம் நடத்த அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம் நடத்த அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம் நடத்த அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
ADDED : நவ 22, 2025 02:16 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்--2026' சிறப்பு முகாம் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026' தொடர்பாக, பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து திரும்ப பெறுவதற்கு, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், நாளை(இன்று) தொடங்கி, இரண்டு நாட்கள், காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
முகாமில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் இந்த பணியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி நிலை முகவர்களும் பங்கெடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நாளொன்றுக்கு, 50 படிவங்களை வாக்காளர்களிடம் பெற்று, உறுதிமொழி படிவத்துடன் இணைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்கலாம்.
சிறப்பு தீவிர திருத்தத்தை, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி நடத்தவும், முகாமை பொது மக்களிடம் கொண்டுசென்று, பொது மக்கள் பயனடையும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தியா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், தனித்துணை கலெக்டர் சுந்தரராஜன், ஆர்.டி.ஓ.,க்கள் சாந்தி, லெனின், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

