sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாவட்டத்தில் 2வது நாளாக தொடர் மழை

/

மாவட்டத்தில் 2வது நாளாக தொடர் மழை

மாவட்டத்தில் 2வது நாளாக தொடர் மழை

மாவட்டத்தில் 2வது நாளாக தொடர் மழை


ADDED : ஜன 13, 2026 05:34 AM

Google News

ADDED : ஜன 13, 2026 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில், நேற்று காலை வரை இரண்-டாவது நாளாக விடிய, விடிய மழை பெய்தது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண-மாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்-களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் கடந்த, 9ல் அறிவித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல், கரூர் மாவட்-டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. அந்த மழை நேற்று மதியம், 12:00 மணி வரை விட்டு விட்டு பெய்தது. பிறகு, குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை தொடர்ந்தது.கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் கரூரில், 1.80 மி.மீ., க.பரமத்தியில், 1.40 மி.மீ., மழை பெய்தது.

* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 5,352 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகு-திக்கு சாகுபடி பணிக்காக காவிரியாற்றில், 4,832 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்-காலில், 520 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்-ளது.

* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 12 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.54 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், 18 கன அடி தண்ணீர் திறக்கப்பட்-டுள்ளது. அணைப்பகுதியில், 2.4 மி.மீ., மழை பெய்தது.

* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனுார், மணவாசி, கிருஷ்ணராயபுரம், கோவக்குளம், பழையஜெயங்கொண்டம், பஞ்சப்-பட்டி, லாலாப்பேட்டை, வரகூர், மேட்டுப்பட்டி, வயலுார், சரவணபுரம், சிவாயம், சேங்கல் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக மக்கள் இயல்பு வாழ்கை பாதிப்பு ஏற்பட்டது. மேலும் வெயில் இல்லாமல் குளிர்ச்சி நிலவி-யது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. மழை காரணமாக நெல் அறு-வடை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us