/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொடர் மழை பெய்ததால் துவரை செடிகள் செழிப்பு
/
தொடர் மழை பெய்ததால் துவரை செடிகள் செழிப்பு
ADDED : டிச 17, 2024 01:55 AM
கிருஷ்ணராயபுரம், டிச. 17-
சேங்கல் சுற்று வட்டார பகுதிகளில், துவரை செடிகளில் பூக்கள் பிடித்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லட்சுமணம்பட்டி, சேங்கல், பழையஜெயங்கொண்டம், வயலூர், சரவணபுரம், மேட்டுப்பட்டி, வரகூர், வேங்காம்பட்டி ஆகிய பகுதிகளில் மானாவாரி விவசாய நிலங்களில் துவரை சாகுபடி செய்து வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்தது.
இதனால், துவரை செடிகளில் பூக்கள் பிடித்து செழிப்பாக வளர்ந்து வருகிறது. பூக்கள் பிடித்து வருவதால், மகசூல் ஓரளவு கிடைக்கும் என விவசாயிகள் கூறினர். மழை தொடர்ந்ததால் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து, சோளம் ஆகிய பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.