/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்னதாராபுரம் பகுதியில் தொடர் பனிப்பொழிவு
/
சின்னதாராபுரம் பகுதியில் தொடர் பனிப்பொழிவு
ADDED : பிப் 10, 2026 05:22 AM
அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் பகுதியில், தொடர் பனிப்பொ-ழிவால் விவசாயிகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அரவக்குறிச்சி அடுத்த சின்னதாராபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் விவசாய பணிகள் நடந்து வருகின்றன. சேனைக்கிழங்கு, பருத்தி, வாழை மற்றும் காய்கறி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்நி-லையில், கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகாலை நேரங்களில் நிலவும் கடும் பனிப்பொ-ழிவால், விவசாயிகளின் அன்றாட பணிகள் பெரிதும் பாதித்து வருகிறது.பனிப்பொழிவு காரணமாக பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பூச்சி தாக்குதல் அதிக-ரிக்கும் அபாயமும் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, குளிர் மற்றும் ஈரப்பதம் காரணமாக, கூலி தொழி-லாளர்கள் பணிக்கு வருவதில் தயக்கம் காட்டு-கின்றனர். எனவே, தொடர்ந்து நிலவும் பனிப்பொ-ழிவை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் ஆலோசனையை, வேளாண் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும்.

