/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி ஒப்பந்த கூலி தொழிலாளி சாவு
/
பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி ஒப்பந்த கூலி தொழிலாளி சாவு
பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி ஒப்பந்த கூலி தொழிலாளி சாவு
பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி ஒப்பந்த கூலி தொழிலாளி சாவு
ADDED : ஆக 14, 2025 02:11 AM
குளித்தலை, பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி ஒப்பந்த தொழிலாளி இறந்தார். குளித்தலை அடுத்த, நாடக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் மகன் புகழேந்தி, 25. இவர் மணப்பாறையில் உள்ள டி.என்.பி.எல்., தொழிற்சாலையில் ஒப்பந்த பிரிவில் கூலி வேலை செய்து வந்தார். இவர், கழுகூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா என்ற பெண்ணை திருமணம் செய்த பின்பு, தனது மனைவி ஊரில் குழந்தையுடன் தங்கி தினந்தோறும் பைக்கில் வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் மதியம், தனது பைக்கில் ஊருக்கு குளித்தலை-மணப்பாறை நெடுஞ்சாலையில் செல்லும்போது, ஆ.உடையாப்பட்டி ரைஸ் மில் அருகில், தோகைமலையில் இருந்து குளித்தலை நோக்கி வந்த சரக்கு ஆட்டோ பைக் மீது மோதியது. இதில் புகழேந்தி துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மனைவி சசிகலா மற்றும் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர்.தோகைமலை போலீசார், புகழேந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரக்கு ஆட்டோ டிரைவர் முனையம்பட்டி வடிவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.