ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
ADDED : செப் 13, 2026 07:15 AM

கரூர்;கரூர் மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் நேற்று, காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
கரூர்
மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துாய்மை
பணியாளர்களுக்கு, பரிந்துரை செய்யப்பட்ட ஊதியம், 760 ரூபாய் வழங்க
வேண்டும், வாரந்தோறும் ஞாயிறு அன்று விடுமுறை வழங்க வேண்டும், பி.எப்., -
இ.எஸ்.ஐ., அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி கடந்த, 7 முதல் மாநகராட்சி அலுவலகம் முன்,
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்
நேற்று மதியம், ஏ.ஐ.சி.சி.டி.யு., மா வட்ட செயலாளர் பால்ராஜ்,
தொழிற்சங்க நிர்வாகிகள் பிலோமினா மேரி, ராமச்சந்திரன் மற்றும்
துாய்மை பணியாளர்கள் சிலர், கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர்
முத்துக்குமரனை சந்தித்து பேசினர்.
அப்போது ஊதிய உயர்வு வழங்க
வேண்டும், போராட்ட காலத்திற்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்,
போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களை பழிவாங்கக் கூடாது என,
தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பரிசீலித்து, முடிவு எடுப்பதாக கலெக்டர் முத்துக்குமரன்
தெரிவித்ததையடுத்து, துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு
போராட்டத்தை, வாபஸ் பெற்று கொள்வதாக அறிவித்தனர்.
இதன்மூலம்
கடந்த, ஆறு நாட்களாக துாய்மை பணியாளர்கள் நடத்திய காத்திருப்பு
போராட்டம் முடிவுக்கு வந்தது. முன்னதாக, கரூர் மாநகராட்சி
அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, ஒப்பந்த
துாய்மை பணியாளர்களை, கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி சந்தித்து
பேசினார். கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
