மாயனுார் கதவணை நிரம்புவதால் மீன் பிடிக்கும் பணியில் தொய்வு
மாயனுார் கதவணை நிரம்புவதால் மீன் பிடிக்கும் பணியில் தொய்வு
ADDED : செப் 13, 2026 07:14 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:மாயனுார் கதவணை நிரம்பி வருவதால், மீன் பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த மாயனுார் கதவணையில், காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. இதில்
மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள், பரிசலில் சென்று
மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். நேற்று
குறைந்தளவிலேயே மீன்கள் விற்கப்பட்டது. இதில் ஜிலேபி மீன்கள் கிலோ,
130 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், கொக்கு மீன், 230 ரூபாய்க்கு
விற்கப்பட்டது.
கதவணையில் நீர் வரத்து அதிகம் இருப்பதால், மீன்
பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கரூர், லாலாப்பேட்டை,
திருக்காம்புலியூர், மகாதானபுரம், பொய்கைப்புத்துார் பகுதிகளை
சேர்ந்தவர்கள் மீன்களை வாங்கி சென்றனர்.
