/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டுறவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் ரேஷன் பொருள் வினியோகம் பாதிப்பு
/
கூட்டுறவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் ரேஷன் பொருள் வினியோகம் பாதிப்பு
கூட்டுறவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் ரேஷன் பொருள் வினியோகம் பாதிப்பு
கூட்டுறவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் ரேஷன் பொருள் வினியோகம் பாதிப்பு
ADDED : அக் 08, 2025 01:33 AM
கரூர், தமிழகத்தில், 20 சதவீத ஊதிய உயர்வை அனைவருக்கும், எந்தவிதமான நிபந்தனை இல்லாமல் வழங்க வேண்டும். சொந்த ஊருக்கு அருகில் பணிபுரியும் வகையில் இடமாறுதல் வழங்க வேண்டும்.
மாவட்ட அளவில் பணிமூப்பு பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 25 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி, அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், கரூர் மாவட்டத்தில், 600க்கும் மேற்பட்ட ரேஷன், கூட்றவு சங்க பணியாளர்கள், வேலை நிறுத்தம் காரணமாக பணிக்கு செல்லவில்லை. அதில், 500 ரேஷன் கடைகளில், 172 கடைகள் மட்டுமே நேற்று செயல்பட்டன. பல கூட்டுறவு சங்கங்கள் செயல்படவில்லை. ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டது.