ADDED : அக் 08, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் அருகே தனியார் டெக்ஸ் நிறுவனத்தில், காப்பர் பிளேட்களை திருடியதாக, இரண்டு ஊழியர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூர்
வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ், 36; கரூர் அருகே
சிப்காட்டில் உள்ள, தனியார் டெக்ஸ் நிறுவன மேலாளர். இவர், டெக்ஸ்
நிறுவனத்தில் இருந்து, காப்பர் பிளேட் திருட்டு போவதாக, போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து,
வாங்கல் போலீசார் விசாரணை நடத்திய போது, 300 கிலோ காப்பர் பிளேட்களை
திருடியது, அதே நிறுவனத்தில் வே லை செய்து வந்த பெரியசாமி, 30,
பாலசுப்பிரமணி, 31, என தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு பேர் மீது
வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
