/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொப்பரை, தேங்காய், எள் ரூ.61 லட்சத்துக்கு ஏலம்
/
கொப்பரை, தேங்காய், எள் ரூ.61 லட்சத்துக்கு ஏலம்
ADDED : ஜன 29, 2025 07:15 AM
கரூர்: சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 61.24 லட்சத்துக்கு ஏலம் போனது.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வேளாண் பொருட்கள் ஏலம் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 5,093 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 45.05 ரூபாய், அதிகபட்சமாக, 57.05 ரூபாய், சராசரியாக, 52.45 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 1,384 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 68 ஆயிரத்து, 521 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல் கொப்பரை தேங்காய், 141 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 138.09 ரூபாய், அதிகபட்சமாக, 147.21 ரூபாய், சராசரியாக, 145.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 94.69 ரூபாய், அதிகபட்சமாக, 135.90 ரூபாய், சராசரியாக, 128.90 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 6,007 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், ஏழு லட்சத்து, 44 ஆயிரத்து, 847 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. எள், 605 மூட்டை வரத்தானது. வெள்ளை எள் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 106.69 ரூபாய், அதிகபட்சமாக, 125.99 ரூபாய், சராசரியாக, 122 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 45,278 கிலோ எடையுள்ள எள், 53 லட்சத்து, 11 ஆயிரத்து, 553 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 61 லட்சத்து, 24 ஆயிரத்து 921 ரூபாய்க்கு ஏலம் போனது.