/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டி நகராட்சி தலைவரை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் கடிதம்
/
பள்ளப்பட்டி நகராட்சி தலைவரை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் கடிதம்
பள்ளப்பட்டி நகராட்சி தலைவரை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் கடிதம்
பள்ளப்பட்டி நகராட்சி தலைவரை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் கடிதம்
ADDED : ஆக 16, 2025 01:49 AM
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி நகராட்சி தலைவரை மாற்றக்கோரி, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என, நகராட்சி கமிஷனரிடம் கவுன்சிலர்கள் கடிதம் வழங்கினர்.
பள்ளப்பட்டி நகராட்சியில் மொத்தம், 27 கவுன்சிலர்கள் உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக நகராட்சி கூட்டம் நடைபெறவில்லை. கடந்த, 11ம் தேதி நடத்தப்பட வேண்டிய கூட்டமும் நடத்தவில்லை. இந்நிலையில், பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை, கவுன்சிலர்களிடம் நகராட்சி தலைவர் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி, நேற்று முன்தினம், 13 கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் கோஷம் எழுப்பியபடி, நகராட்சி தலைவரை மாற்றக் கோரி கையெழுத்திட்ட கடிதத்தை கமிஷனர் ஆர்த்தியிடம் வழங்கினர்.
இது குறித்து, பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான் கூறுகையில்,'' சிலர் துாண்டுதலின் பேரில் தன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். 13 பேர் மட்டுமே வருகை தந்து, 23 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கடிதத்தில் கையெழுத்து போட்டதாக பொய் கூறுகின்றனர்,'' என்றார்.