/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாட்டுக்கோழி கிலோ ரூ.500க்கு விற்பனை
/
நாட்டுக்கோழி கிலோ ரூ.500க்கு விற்பனை
ADDED : ஜூலை 13, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்., இரும்பூதிப்பட்டி சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் செயல்படுகிறது. இந்த சந்தையில் காலை நேரத்தில் ஆடு, கோழி, காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.
பஞ்சப்பட்டி, கழுகூர், தேசியமங்களம், தோகைமலை, அய்யர்மலை, சிவாயம், வயலுார், கந்தன்குடி பகுதிகளில் உள்ள விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதில், ஏழு கிலோ கொண்ட ஆடு, 6,800 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

