/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பல சரக்கு கடையில் திருடிய தம்பதியர் கைது
/
பல சரக்கு கடையில் திருடிய தம்பதியர் கைது
ADDED : ஜூன் 17, 2025 02:23 AM
கரூர், தான்தோன்றிமலை அருகே, கடையில் பணம் திருடியதாக, கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கணபதிபாளையம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம், 45; இவர், மதுரை சாலை சுக்காலியூர் பகுதியில் பல சரக்கு கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, பரமசிவம் அவரது கடையில் இருந்து, அருகில் உள்ள டீ கடைக்கு சென்றார். அப்போது, மாருதி ஈகோ வேனில் சென்ற கரூர் நடந்தை பகுதியை சேர்ந்த தர்மலிங்கம், 23; அவரது மனைவி மதுமிதா, 20; ஆகியோர், பல சரக்கு கடையில் இருந்த, 6,000 ரூபாயை திருடியுள்ளனர்.
இதுகுறித்து, பரமசிவம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிந்து தர்மலிங்கம், அவரது மனைவி மதுமிதாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.