/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சி.பி.எம்., முற்றுகை போராட்டம்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சி.பி.எம்., முற்றுகை போராட்டம்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சி.பி.எம்., முற்றுகை போராட்டம்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சி.பி.எம்., முற்றுகை போராட்டம்
ADDED : ஆக 25, 2024 06:52 AM
குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்டில், தரைக்கடை வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதி மறுத்த நகராட்சி தலைவர் மற்றும் நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வியாபாரிகள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
குளித்தலை பஸ் ஸ்டாண்டில், நகராட்சி நிர்வாகம் சார்பில், 20 கடைகள் குத்தகை அடிப்படையில் வாடகைக்கு விட்டு செயல்-பட்டு வருகிறது. இந்நிலையில் தரைக்கடை வியாபாரிகள், தள்ளு-வண்டி கடைக்காரர்கள் ஆகியோர், பொருட்களை வியாபாரம் செய்யக் கூடாது என, நகராட்சி தலைவர், கமிஷனர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை கண்டித்து நேற்று மா.கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தரைக்-கடை வியாபாரிகள், தங்களுடைய தள்ளுவண்டி மற்றும் கட்சி கொடியுடன் பஸ் ஸ்டாண்டு காந்தி சிலையில் இருந்து, ஊர்வல-மாக நகராட்சி அலுவலகம் சென்றனர். பின், நுழைவாயிலில் கம்-யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் தலை-மையில், தரையில் அமர்ந்து கண்டன கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து குளித்தலை போலீசார் மற்றும் நகராட்சி கம-ஷனர் நந்தகுமார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் பொது மக்களுக்கும், பஸ்கள் செல்வதற்கும் இடையூறு இல்லாமல் தற்காலிகமாக கடைகள் அமைக்கலாம் என்று கூறியதால், போராட்டம் கைவிடப்பட்டது.

