/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் குழாயில் விரிசல்; தண்ணீர் சப்ளை பாதிப்பு
/
குடிநீர் குழாயில் விரிசல்; தண்ணீர் சப்ளை பாதிப்பு
ADDED : டிச 09, 2024 07:03 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து, மேட்டு மகாதானபுரம் கட்டளை மேட்டு வாய்க்கால் மேல்புறம் வழியாக, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குழாய் வழியாக வையம்பட்டி வரை காவிரி நீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, வாய்க்கால் மேல்புறம் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு அதிகமான தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. குறைந்த அழுத்தம் காரணமாக, மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் குடிநீர் பிடிக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, விரிசலடைந்த காவிரி கூட்டு குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.