ADDED : ஆக 27, 2026 02:57 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்துக்கு உட்-பட்ட, வல்லம் கிராம சாலை வழியாக காவிரி குடிநீர் கொம்பா-டிப்பட்டி வரை செல்கிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வல்லம் சாலையோரத்தில் செல்லும் குழாயில் விரிசல் ஏற்பட்டு, குடிநீர் வீணாக சாலையோரம் உள்ள குட்டைக்கு செல்கிறது. இதனால் தினமும் காவிரி குடிநீர் வீணாகிறது. விரிசல் ஏற்பட்-டுள்ள குடிநீர் குழாயை சரி செய்து, தண்ணீர் வீணாகாமல் மக்க-ளுக்கு தங்கு தடையின்றி கிடைக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.
