/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பயிர் அறுவடை பரிசோதனை; கள பணியாளர்களுக்கு பயிற்சி
/
பயிர் அறுவடை பரிசோதனை; கள பணியாளர்களுக்கு பயிற்சி
ADDED : ஆக 03, 2024 06:39 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த தரகம்பட்டியில், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புள்ளியியல் மற்றும் பொருளியியல் துறையின், கரூர் மாவட்ட புள்ளியியல் துணை இயக்குனர் மயில்சாமி தலைமையில், வேளாண்மை துறை களப்பணியாளர்களுக்கு, பயிர் அறுவடை பரிசோதனை பயிற்சி, 2 நாள் நடந்தது.
குளித்தலை வட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் ரமேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி தேசிய மாதிரி அளவீட்டு நிறுவன உதவி இயக்குனர் அர்ஜூனன் கலந்து கொண்டார்.வட்டார புள்ளியியல் ஆய்வாளர்களான குளித்தலை குரு லட்சுமி, தோகைமலை விஜயகாந்த், கடவூர் சக்திவேல், கிருஷ்ணராயபுரம் சிவக்குமார், தலைமையிட புள்ளியியல் ஆய்வாளர் ரவீந்திரபிரபு ஆகியோர் தங்களது வட்டாரங்களில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளும் விபரங்கள் குறித்து பயிற்சி அளித்தனர். இரண்டாம் நாள், கீழப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி உதவியுடன் களப்பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை, கடவூர் புள்ளியியல் ஆய்வாளர் சக்திவேல் செய்திருந்தார்.பயிற்சியில், குளித்தலை, தோகைமலை, கடவூர், கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளும் களப்பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.