/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீபாவளி முடிந்து ஊர் திரும்பியதால் கரூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம்

ADDED : நவ 04, 2024 05:06 AM
கரூர்: தீபாவளி முடிந்து பொதுமக்கள் ஊருக்கு திரும்புவதால், கரூர் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள், கோவை, சென்னை, பெங்க-ளூரு உள்பட பல்வேறு நகரங்களில் பணி, படிப்பு போன்ற பல்-வேறு வேலை நிமித்தமாக தங்கி உள்ளனர். தீபாவளி பண்டிகை-யையொட்டி தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்-டது. இதனால், கடந்த, 30 முதல் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரான கரூருக்கு வரத்தொடங்கினர். கடந்த, நான்கு நாட்கள் அரசு விடுமுறை என்பதால் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை குடும்பத்தோடு உற்சாகமாக கொண்டா-டினர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில், நேற்று தங்கள் பணிபுரியும் இடத்திற்கு பொதுமக்கள் செல்ல துவங்கி உள்ளனர். இதன் காரணமாக கரூர் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் அலைமோதுகிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் சார்பிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்-றன. கரூர் பஸ் ஸ்டாண்டில், பஸ்சில் சீட் பிடிக்க மக்கள் கூட்டம் அலை மோதியது. சிலர், ஏற்கனவே முன்பதிவு செய்து பஸ்களில் பயணித்தனர்.