/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடும்ப தகராறில் மகனுக்கு வெட்டு: தந்தைக்கு 'காப்பு'
/
குடும்ப தகராறில் மகனுக்கு வெட்டு: தந்தைக்கு 'காப்பு'
குடும்ப தகராறில் மகனுக்கு வெட்டு: தந்தைக்கு 'காப்பு'
குடும்ப தகராறில் மகனுக்கு வெட்டு: தந்தைக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 15, 2024 01:01 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த மேட்டுமகாதானபுரம் கிராமத்தை சேர்ந்-தவர் சுகந்தி, 35; கூலித்தொழிலாளி.
இவரது கணவர் கார்த்திக், 36, வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், கடந்த, 9 இரவு, 9:00 மணிக்கு, கணவன், மனைவியி-டையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கணவர் கார்த்திக், அருகில் கிடந்த அரிவாளால் மனைவியை வெட்ட முயன்றுள்ளார். அப்போது மகன் மணிகண்டன், 15, தடுக்க சென்றபோது, கைவிரலில் வெட்டு விழுந்தது. அக்கம் பக்கத்தினர் மணிகண்-டனை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்-தனர். இதுகுறித்து மனைவி கொடுத்த புகார்படி, லாலாப்-பேட்டை போலீசார், கார்த்திக்கை கைது செய்தனர்.