/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து பலி
/
சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து பலி
ADDED : ஏப் 15, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, மேலப்பகுதி பஞ்., வீரியம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60. நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில் சுப்பிரமணி சென்ற போது, வீரணம்பட்டி. விரி-யம்பட்டி ரோட்டில் உள்ள பாலக்கட்டை அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் மயக்கம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர் ஏற்-கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து அவரது மகன் மாணிக்கம், கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.