/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் வறண்ட நிலையில் தடுப்பணை
/
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் வறண்ட நிலையில் தடுப்பணை
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் வறண்ட நிலையில் தடுப்பணை
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் வறண்ட நிலையில் தடுப்பணை
ADDED : மே 05, 2024 02:17 AM
கரூர்:அமராவதி அணையில் இருந்து, தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெ.ஆ., கோவில் தடுப்பணை வறண்ட நிலையில் உள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 5 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து நின்றதால், வறண்ட நிலையில் தடுப்பணை உள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 39.67 அடியாக இருந்தது.
மாயனுார் கதவணை
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை வினாடிக்கு, 518 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரி யாற்றில், திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் நிறுத் தப்பட்டுள்ளது.
நங்காஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது, 25.42 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத் தப்பட்டுள்ளது.