ADDED : நவ 05, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகள் மாயம்; தாய் புகார்
குளித்தலை, நவ. 5-
குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., தெற்கு மையிலாடி கிராமத்தை சேர்ந்தவர் உதயா, 45, கூலித்தொழிலாளி, இவரது, 17 வயது மகள் தனியார் டெக்ஸ்டைல் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். இவர் கடந்த, 2 காலை 9:00 மணியளவில் வீட்டில் இருந்தார். தாய், தந்தையர் வேலைக்கு சென்ற பின், அன்று மாலை, 4:00 மணியளவில் வீட்டில் வந்து பார்த்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார் படி குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.