ADDED : செப் 19, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:திண்டுக்கல்
மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த, பில்லம்ம நாயக்கன்பட்டியை
சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 36. விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது
மகள் கோகிலவாணி, 20,
கரூரில் உள்ள அரசு கல்லுாரியில் பி.ஏ., மூன்றாம்
ஆண்டு படித்து வருகிறார். தோழியின் திருமண விழாவுக்காக, பாலவிடுதி
அருகே வளையப்பட்டியில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டிற்கு சென்றார்.
பின்னர்
திருமண விழா முடிந்து வீடு திரும்ப வில்லை. பின்னர் கல்லுாரி
விடுதிக்கும் செல்லவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும்,
எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.இதுகுறித்து தமிழ்ச்செல்வன்
கொடுத்த புகாரின்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து,
கோகிலவாணியை தேடி வருகின்றனர்.
