ADDED : நவ 25, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த வனவாசி பஞ்., இந்திரா காலனியை சேர்ந்-தவர் கிருஷ்ணவேணி, 46; விவசாயி. இவரது மகள் சிவகாமி, 29. கடந்த, 11 ஆண்டுகளுக்கு முன் பழைய ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
தம்பதியருக்கு, 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடால், சிவகாமி பிரிந்து தாய் வீட்டில், கடந்த, 9 ஆண்டாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 22 காலை, 10:00 மணியில் இருந்து சிவகாமியை காண-வில்லை. உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும், சிவகாமி குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால், தாய் கிருஷ்ணவேணி கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் சிவகாமியை தேடி வரு-கின்றனர்.