/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் மார்ச்சுக்குள் அம்ருத் திட்டம் நிறைவு செய்ய முடிவு
/
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் மார்ச்சுக்குள் அம்ருத் திட்டம் நிறைவு செய்ய முடிவு
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் மார்ச்சுக்குள் அம்ருத் திட்டம் நிறைவு செய்ய முடிவு
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் மார்ச்சுக்குள் அம்ருத் திட்டம் நிறைவு செய்ய முடிவு
ADDED : நவ 30, 2024 01:00 AM
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் மார்ச்சுக்குள்
அம்ருத் திட்டம் நிறைவு செய்ய முடிவு
கரூர், நவ. 30-
''கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அம்ருத் பாரத் திட்டப்பணிகளை வரும், மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா தெரிவித்தார்.
கரூர் ரயில்வே ஸ்டேஷனில், நேற்று ஆய்வு பணியை மேற்கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும், 508 ரயில்வே ஸ்டேஷன்களில், அம்ருத் பாரத் என்ற திட்டத்தின் கீழ், விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
அதில், கரூர் ரயில்வே ஸ்டேஷன், 34 கோடி ரூபாய் செலவில், விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், எந்தெந்த பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, ஆய்வு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. வரும் மார்ச் மாதத்துக்குள், விரிவாக்க பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது மதுரையில் இருந்து கரூர், சேலம் வழியாக பெங்களூருவுக்கு, வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. கூடுதலாக ரயில்கள் இயக்குவது குறித்து, வரும் காலங்களில் முடிவு செய்யப்படும்.
கரூரில் இருந்து சென்னைக்கு, பகல் நேரத்தில் ரயில் இயக்கும் திட்டம், தற்போது இல்லை. புயல் காரணமாக, ரயில்கள் இயக்குவதில் நேர மாற்றம் இன்று இரவு தான் (நேற்று) தெரியவரும்.
இவ்வாறு கூறினார்.
கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, கரூர் ரயில்வே நிலைய மேலாளர் சேவியர் ஆகியோர் உடனிருந்தனர்.