/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோடங்கிப்பட்டி, வீரராக்கியத்தில் மேம்பாலம் கட்டும் பணி தாமதம்
/
கோடங்கிப்பட்டி, வீரராக்கியத்தில் மேம்பாலம் கட்டும் பணி தாமதம்
கோடங்கிப்பட்டி, வீரராக்கியத்தில் மேம்பாலம் கட்டும் பணி தாமதம்
கோடங்கிப்பட்டி, வீரராக்கியத்தில் மேம்பாலம் கட்டும் பணி தாமதம்
ADDED : செப் 28, 2024 01:08 AM
கோடங்கிப்பட்டி, வீரராக்கியத்தில் மேம்பாலம் கட்டும் பணி தாமதம்
கரூர், செப். 28-
கோடங்கிப்பட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில், உயர்மட்ட பாலம் மேம்பாலம் கட்டும் பணி தாமதம் ஆகியுள்ளது.
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை தவிட்டுப்பாளையம், மண்மங்கலம், செம்மடை, பெரிச்சுபாளையம், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, கரூர் -
திருச்சி நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டி பிரிவு, வீரராக்கியம் பிரிவு பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், அந்த பகுதிகளில் மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல முறை சாலை மறியல் போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த, 15 ஆண்டுகளில் ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்றால், மேம்பாலம் கட்டப்படும் என உறுதியளித் தனர்.
இந்நிலையில் கடந்த, 2019 ல் இறுதியில், மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில், அ.தி.மு.க., ஆட்சியின் போது கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரிச்சுபாளையம், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு, தற்போது பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.
மேலும், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை நாமக்கல் மாவட்ட எல்லையான, தவிட்டுப்பாளையம் பிரிவு, கரூர் அருகே, சேலம் தேசிய நெடுஞ்சாலையில், செம்மடை பிரிவு பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன் பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.
தற்போது, மண்மங்கலம் பிரிவில் மேம்பாலம் கட்டும் பணி, இறுதி
கட்டத்தை எட்டியு ள்ளது.
இந்நிலையில், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோடங்கிப்பட்டி பிரிவு, வீரராக்கியம் பிரிவில், உயர்மட்ட மேம்பாலம் கட்ட, 44 கோடியே, 12 லட்ச ரூபாயை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் கடந்த பிப்., 22ல் ஒதுக்கியது. ஆனால், நிதி ஒதுக்கி ஏழு மாதங்கள் ஆன நிலையில், பணி தொடங்கப்படவில்லை.
இதனால், கோடங்கிப்பட்டி, வீரராக்கியம் பகுதிகளில், தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே, கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டி, வீரராக்கியம் பிரிவு பகுதியில், உடனடியாக மேம்பாலம் கட்டும் பணியை, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் துவங்க வேண்டும் என அப்பகுதியினர்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.