தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாற்றுப்பயிர் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

மாற்றுப்பயிர் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

மாற்றுப்பயிர் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை


ADDED : செப் 29, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்க செய-லாளர் மகாதானபுரம் ராஜாராம் வெளியிட்ட அறிக்கை:

மழை குறைவாக பெய்த நிலையில், உபரிநீரும் திறக்கப்படாததால், தமிழகத்தில் குறுவை சாகு-படி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இன்-றைய நிலையில், 20 டி.எம்.சி., தண்ணீர் பற்றாக்-குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம், கர்நா-டகா அணைகளில் போதிய நீரை தேக்கியிருந்-தது. அந்த தண்ணீரில், 19 டி.எம்.சி., தண்ணீரை தடுப்பணைகளுக்கு, கர்நாடகா அரசு மடை மாற்றம் செய்துள்ளது. ஆனால், கர்நாடகா அரசு வழக்கறிஞர் ஷியான் திவான் தவறான தகவல்-களை தெரிவித்து வருகிறார். கர்நாடகா அணை-களில், 114 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது. அதை, விதிகளை மீறி கோடை சாகுபடிக்கு கர்நாடகா அரசு பயன்படுத்தி உள்ளது.காவிரி மேலாண்மை ஆணையத்தின் எந்த உத்த-ரவையும், கர்நாடகா அரசு பின்பற்றி தமிழகத்-துக்கு தண்ணீர் திறப்பது இல்லை. நீர் பற்றாக்-குறை காரணமாக, தமிழக விவசாயிகள் நெல் பயிரிட முடியாமல் தவிக்கின்றனர். எனவே, தமி-ழக அரசு இன்றைய நிலையில், மாற்றுப்பயிர் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, இருக்கும் தண்ணீரை கொண்டு குறுகிய கால பயிர்களை பயிரிட்டு, பலன் காணும் வகையில், மாற்றுப்பயிர் திட்டத்தை தமிழக அரசு வேளாண்மை விஞ்ஞானிகள், வேளாண்மை வல்லுநர்கள், நீரியியல் நிபுணர்களின் ஆலோச-னைகளை பெற்று அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us