தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ திண்டுக்கல் சாலையில் மின்விளக்கு தேவை: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

திண்டுக்கல் சாலையில் மின்விளக்கு தேவை: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

திண்டுக்கல் சாலையில் மின்விளக்கு தேவை: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


ADDED : செப் 29, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; கரூர் - திண்டுக்கல் விரிவாக்க சாலையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் - திண்டுக்கல் சாலையில், வெள்ளியணை, மணவாடி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக திருச்சி, திண்டுக்கல் பல்வேறு மாவட்டங்க-ளுக்கு பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்-கின்றன. இதனால், கரூர் - திண்டுக்கல் சாலையில், வெங்ககல்பட்டியில் இருந்து, வெள்-ளியணை வரை சாலை விரிவாக்க பணிகள் சமீ-பத்தில் தொடங்கியது. தற்போது சாலை விரி-வாக்க பணிகள் நிறைவு பெற்று, சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், கரூர் - திண்டுக்கல் சாலை, வெங்க-கல்பட்டி முதல் வெள்ளியணை வரை விரி-வாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இருளில் மூழ்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, புதிய கரூர் - திண்டுக்கல் விரிவாக்க சாலையில், மின் கம்பங்கள் அமைத்து, விளக்கு-களை பொருத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us