/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நொய்யலில் கலக்கும் சாயக்கழிவை தடுக்க பாசன விவசாயிகள் கோரிக்கை
/
நொய்யலில் கலக்கும் சாயக்கழிவை தடுக்க பாசன விவசாயிகள் கோரிக்கை
நொய்யலில் கலக்கும் சாயக்கழிவை தடுக்க பாசன விவசாயிகள் கோரிக்கை
நொய்யலில் கலக்கும் சாயக்கழிவை தடுக்க பாசன விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 07, 2024 03:39 AM
கரூர்: வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கியதால், நொய்யல் ஆற்றில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து வரும் சாயக்கழிவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல் ஆறு, கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைப்-பகுதியில் உருவாகி, திருப்பூர் மாவட்டம், வழியாக கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியில் காவிரியாற்றில் கலக்கிறது. நொய்யல் ஆறு மூலம் கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 75,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த, 15 ஆண்டுக-ளுக்கும் மேலாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெருகிய சாயப்பட்டறைகளால், நொய்யல் ஆறு பாதிக்கப்பட்டது. ஆற்றில் சாயக்கழிவு
கலந்து விவசாய நிலங்களில், சாகுபடி செய்ய முடி-யாத நிலை ஏற்பட்டது.கரூர் மாவட்டத்தில், நொய்யல், அஞ்சூர், துக்காச்சி, தென்-னிலை, முன்னுார், அத்திப்பாளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்-பட்ட கிராமங்களில், 25,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டது. சாயக்கழிவை
கட்டுப்படுத்தக்கோரி, பல்வேறு விவசாய சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகும், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' முறையை, பல சாயப்பட்டறைகள் பின்பற்றா-ததால், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு தொடர்ந்து வருவதாக,
விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து, கரூர் மாவட்ட பாசன விவசாயிகள் கூறியதாவது:கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து நொய்யல் ஆற்றில் வரும் சாயக்கழிவு, கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றில் கலக்கி-றது. இதனால், டெல்டா மாவட்டம் மட்டுமின்றி, வீராணம் ஏரி மூலம் காவிரி தண்ணீரை
பயன்படுத்தும், சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படும். சாயக்கழிவு விஷயத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். சாயக்க-ழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க
வேண்டும். சாயக்கழிவு பாதிப்பில் இருந்து நொய்யல், காவிரி-யாற்றை பாதுகாக்க வேண்டும்.தற்போது, வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து தொடங்கும் போது, சாயக்க-ழிவு நீரை கலக்க செய்துவிடுகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்-டங்களில் உள்ள சாயப்பட்டறைகளில்
இருந்து வெளியேறும் சாயக்கழிவு நொய்யல் ஆறு மூலம், காவிரியாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். இல்லையென்றால், கரூர் மாவட்டத்தில், தண்ணீர் இருந்தும் விவசாயம் பொய்த்துவிடும். பொதுமக்க-ளுக்கும்
உடல்நலக்கேடு ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.