ADDED : நவ 13, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்
பழைய அரசு தலைமை மருத்துவமனை சாலையில் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை
அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட மையம்
சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் தனலட்சுமி தலைமை
வகித்தார்.
மாவட்ட செயலாளர் சிங்கராயர் கோரிக்கையை விளக்கி
பேசினார். நிதி சார்ந்த கோரிக்கைகளை செய்ய முடியாது என்று கூறிய தமிழக
அரசை கண்டித்து வணிகவரித்துறை ஊரக வளர்ச்சித் துறை
நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட துறை பணியாளர்கள், ஒரு
மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புகலூர் வட்ட
பொருளாளர் ஈஸ்வரி, அரவக்குறிச்சி வட்ட செயலாளர் கணேசன் நிர்வாகி
சதீஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் உள்பட பலர்
பங்கேற்றனர்.