/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காது கேளாதோர் வாய் பேசாதோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
காது கேளாதோர் வாய் பேசாதோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காது கேளாதோர் வாய் பேசாதோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காது கேளாதோர் வாய் பேசாதோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 01, 2024 01:28 AM
காது கேளாதோர் வாய் பேசாதோர்
சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர், அக். 1-
தமிழ்நாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சதாசிவம் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், அரசு வேலைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு, 19 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இலவச வீடு மற்றும் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். காவல் துறையில் புகார் அளிக்க வாட்ஸ் ஆப் வசதியை ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் சைகை மொழிப்பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட செயலாளர் அரவிந்த், நிர்வாகிகள் கவின், வாசு, பார்த்திபன், அரசு ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.