/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 10, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், டிச. 10-
கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், கரூர் வையாபுரி நகர் செங்குந்தபுரம், நான்காவது கிராஸ் பகுதியில் உள்ள, ஆர்.எம்.எஸ்., தபால் நிலையத்தை மூடுவதை மத்திய பா.ஜ., அரசு நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., - மா.கம்யூ., - இ.கம்யூ., - காங்.,- வி.சி.க., தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.