/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 14, 2025 02:13 AM
கரூர், கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில், எல்.பி.எப்., மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில் இந்திய பொருட்களுக்கு, 50 சதவீதம் வரி விதித்துள்ள
அமெரிக்கா அதிபர் டிரம்பை கண்டித்தும், அனைத்து நாடுகளுடன் வர்த்தகம் செய்து, இந்திய இறையாண்மையை காக்க வேண்டும், இந்தியா-இங்கிலாந்து சிட்டா ஒப்பந்தம் ரத்து செய்ய வேண்டும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை நிறுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட எல்.பி.எப்., தலைவர் அப்பாசாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியம், வடிவேலன், சுடர்வளவன் உள்பட, பலர் பங்கேற்றனர்.