/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சி.ஐ.டி.யு., அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
/
சி.ஐ.டி.யு., அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 11, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட சி.ஐ.டி.யு., சார்பில், மாவட்ட தலைவர் ஜீவா-னந்தம் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், குறைந்தப்பட்ச ஊதியமாக மாதம், 26 ஆயிரம் ரூபாய், ஓய்வூதியம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும், பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அனைத்து, பணப்பயன்களையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியு-றுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் ராஜா முகமது, சுப்பிரமணியன், சரவணன், கிருஷ்ணமூர்த்தி உள்-பட, பலர் பங்கேற்றனர்.