/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
/
பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 09, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து நிலை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பகுதி நேர ஆசிரியர்கள் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலர்கள், ஆசிரியர், பயிற்றுனர்கள், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பங்கேற்றனர்.