/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 15, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், நீதிமன்ற உத்தரவுபடி கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய கோவிலுக்கு சொந்தமான இடங்களை, அளவீடு செய்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன், துணைத்தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் சிங்கராயர், பொருளாளர் தனபால் உள்பட பலர் பங்கேற்றனர்.