/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 07, 2025 01:09 AM
கரூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம், கரூர் கிளை சார்பில், மாநில கவுரவ தலைவர் குப்புசாமி தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, கூட்டுறவு வங்கி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், 20 சதவீத ஊதிய உயர்வை அனைவருக்கும், எந்தவிதமான நிபந்தனை இல்லாமல் வழங்க வேண்டும், சொந்த ஊருக்கு அருகில் பணிபுரியும் வகையில், இடமாறுதல் வழங்க வேண்டும், மாவட்ட அளவில் பணிமூப்பு பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டும் பதவி உயர்வு வழங்க வேண்டும், தேவையற்ற இடங்களில், முதல்வர் மருந்தகம் திறந்து நாள்தோறும், 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் கதிரவன், செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் செல்வரத்தினம் உள்பட, பலர் பங்கேற்றனர்.