sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மூடப்பட்ட புறக்காவல் நிலையங்களால் சிக்கல்

/

மூடப்பட்ட புறக்காவல் நிலையங்களால் சிக்கல்

மூடப்பட்ட புறக்காவல் நிலையங்களால் சிக்கல்

மூடப்பட்ட புறக்காவல் நிலையங்களால் சிக்கல்


ADDED : அக் 07, 2025 01:09 AM

Google News

ADDED : அக் 07, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பெரும்பாலான புறக்காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், பாதுகாப்புடன் பொருட்களை வாங்கி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில், குற்றச்செயல்களை தடுக்கவும், பொதுமக்கள் எளிதில் புகார் தெரிவிக்கவும், 10க்கும் மேற்பட்ட இடங்களில் புறக்காவல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

குறிப்பாக, மாவட்ட எல்லை பகுதி மட்டுமின்றி, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கண்டறியப்பட்ட, முக்கிய இடங்களிலும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அதில், ஷிப்ட் முறையில் போலீசார் பணியில் இருந்தனர்.

இந்நிலையில் வெளியூர் பாதுகாப்பு பணி, உள்ளூருக்கு முக்கிய பிரமுகர் வரும் போது பாதுகாப்பு பணி, நீதிமன்ற பணி, உள்ளூர் பிரச்னையாகும் இடத்தில் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், புறக்காவல் நிலையங்களில் போலீசாரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பல புறக்காவல் நிலையங்கள் நிரந்தரமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும், 20ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம், காட்டுபுத்துார், திண்டுக்கல், ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட பகுதி களில் இருந்தும் பொதுமக்கள், கரூர் நகருக்கு பல பொருட்களை வாங்க வர துவங்கியுள்ளனர்.

ஆனால், பல புறக்காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாலும், சில புறக்காவல் நிலையங்கள் திறந்திருந்தாலும் போலீசார் இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக, கரூர் பஸ் ஸ்டாண்டில், போலீசார் பெரும்பாலும் பணியில் இருப்பது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

கரூர் ஜவஹர் பஜார், கோவை சாலை, தின்னப்பா கார்னர் சாலையில், ஜவுளி, தங்கநகை கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ளது. வழக்கமாக, தீபாவளி பண்டிகையின் போது, ஜவஹர் பஜாரில் உயர்மட்ட கண்காணிப்பு கோபுரம் அமைத்து, எல்.இ.டி., திரை மூலம் முன்கூட்டியே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

ஆனால், தீபாவளி பண்டிகைக்கு இன்னும், 13 நாட்களே உள்ள நிலையில், போலீசார் சிறப்பு கண் காணிப்பு பணியை துவக்கவில்லை. மேலும், பல பகுதிகளில் புறக்காவல் நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால், வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் சமூக விரோதி கள் ஈடுபட கூடும். எனவே, புறக்காவல் நிலையங்களில் போலீசாரை பணிக்கு அமர்த்தி, கண்காணிப்பு பணியை துவக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us