/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 27, 2024 01:19 AM
தொழிற்சங்கங்கள்
சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர், நவ. 27-
கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், மாவட்ட எல்.பி.எப்., தலைவர் அண்ணா வேலு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், விலைவாசி உயர்வை
கட்டுப்படுத்த வேண்டும், பறிக்கப்பட்ட ரயில்வே சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும், பொது வினியோக முறையை விரிவாக்கி செயல்படுத்த வேண்டும், தேசிய கல்வி கொள்கை, 2020-ஐ ரத்து செய்ய வேண்டும், அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிர்வாகிகள் வடிவேலன், முருகேசன், சுடர் வளவன், ராஜ சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.