/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 09, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட, கம்யூ., கட்சி தொழிற்சங்கங்கள் சார்பில், மாவட்ட மா.கம்யூ., கட்சி செயலாளர் ஜோதிபாசு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மத்திய பா.ஜ., அரசு கொண்டு-வந்த தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும்; ஒப்பந்த அடிப்படையிலான வேலை திட்டத்தை வாபஸ் பெற வேண்டும்; நீதித்துறை சாராத தீர்ப்பாயங்களை அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்-கைகள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், இ.கம்யூ., கட்சி மாவட்ட செய-லாளர் கலாராணி, வி.சி.க., மண்டல செயலாளர் தமிழ்வேந்தன், கூட்டமைப்பு நிர்வாகிகள் தண்ட-பாணி, ஜீவானந்தம், சுடர் வளவன், இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.

