/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறு விளையாட்டு அரங்கம் கான்பரன்சில் முதல்வர் அடிக்கல்
/
சிறு விளையாட்டு அரங்கம் கான்பரன்சில் முதல்வர் அடிக்கல்
சிறு விளையாட்டு அரங்கம் கான்பரன்சில் முதல்வர் அடிக்கல்
சிறு விளையாட்டு அரங்கம் கான்பரன்சில் முதல்வர் அடிக்கல்
ADDED : டிச 09, 2025 04:50 AM
குளித்தலை: தமிழக முதல்வரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தில், குளித்தலை அடுத்த அய்யர்மலையில், அரசு கலை கல்லுாரி அருகே சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஒதுக்-கீட்டு தொகை, 2.50 கோடி மற்றும் குளித்தலை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 20 லட்சம் ரூபாய் என, 2.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்-ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின், காணொலியில் அடிக்கல் நாட்டி வைத்தார். கலெக்டர் தங்கவேல், எம்.எல்.ஏ., மாணிக்கம், மாவட்ட திட்ட அலுவலர் வீரபாண்டி, தாசில்தார் இந்துமதி, உதவி செயற்-பொறியாளர் சரவணன் உள்பட பலர் கலந்து-கொண்டனர்.