/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கரூரில் தி.மு,க., சார்பில் கொண்டாட்டம்
/
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கரூரில் தி.மு,க., சார்பில் கொண்டாட்டம்
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கரூரில் தி.மு,க., சார்பில் கொண்டாட்டம்
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கரூரில் தி.மு,க., சார்பில் கொண்டாட்டம்
ADDED : நவ 28, 2024 01:05 AM
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா
கரூரில் தி.மு,க., சார்பில் கொண்டாட்டம்
கரூர், நவ. 28-
துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழாவை, கரூர் தி.மு.க.,வினர் உற்சாகமாக கொண்டாடினர்.
கரூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பசுபதிபாளையம் ரவுண்டானாவில், தி.மு.க., மத்திய கிழக்கு மாநகரம் சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டப்பட்டது. மாநகராட்சி மண்டல தலைவரும், மாநகர பகுதி செயலாளருமான ராஜா தலைமை வகித்தார். முதலில், ரவுண்டானாவில் கொடியேற்றினர். பின், அவரது பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, 500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. பின், 500 பேருக்கு வேட்டி, சட்டை, 250 பேருக்கு சேலை, 250 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
விழாவில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில். மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.
* தி.மு.க., கரூர் மாநகரம் மேற்கு சார்பில், தான்தோன்றிமலையில் அன்பாலயம் காப்பகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், துணை மேயரும், மாநகர மேற்கு பகுதி செயலாளருமான சரவணன் தலைமையில் வழங்கப்பட்டது.
* கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடந்த விழாவுக்கு, எம்.எல்.ஏ.,சிவகாம சுந்தரி தலைமை வகித்தார். பஸ் ஸ்டாப் அருகில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., தலைவர் சேதுமணி, நகர செயலர் சசிக்குமார், மேற்கு ஒன்றிய செயலர் ரவிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.