/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருக்குறள் பேரவை நுால் போட்டி வெற்றி பெற்றவர்கள் விபரம்
/
திருக்குறள் பேரவை நுால் போட்டி வெற்றி பெற்றவர்கள் விபரம்
திருக்குறள் பேரவை நுால் போட்டி வெற்றி பெற்றவர்கள் விபரம்
திருக்குறள் பேரவை நுால் போட்டி வெற்றி பெற்றவர்கள் விபரம்
ADDED : ஜன 03, 2026 07:56 AM
கரூர்: திருக்குறள் பேரவை சார்பில் நடந்த, நுால் போட்டியில், வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் திருக்குறள் பேரவையின், 40வது ஆண்டு விழா வரும், 25ல் கரூரில் நடக்கிறது. அதற்காக நடந்த நுால் போட்டியில், 123 நுால்கள் வரப்பெற்றது. அதில் முதல் பரிசை, வல்லம் சுந்தராம்பாள் எழுதிய, தமிழில் உவமை கோட்பாடுகளும், பயன்பாடும் என்ற நுால் பெற்றது.
இரண்டாவது பரிசை புதுச்சேரி ஆசிரியர் கிருங்கை சேதுபதி எழுதிய, ஆன்மிக ஞாயிறு அடிகளாளர், மதுரை திருமலை எழுதிய எல்லோரும் நல்லவரே ஆகிய நுால்கள் பெற்றது. மூன்றாவது பரிசாக கடவூர் மணிமாறன் எழுதிய தெற்கே திராவிடம் என்ற நுால் பெற்றது. விழாவில் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.