/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் நகரில் உலா வரும் கால்நடைகள்; விபத்து அபாயத்தில் பொதுமக்கள் பீதி

UPDATED : ஜன 03, 2026 09:22 AM
ADDED : ஜன 03, 2026 07:57 AM

கரூர்: கரூர் நகரப்பகுதிகளில் மாடு, ஆடுகள் உள்ளிட்ட, கால்நடைகள் சுற்றி வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கரூர் நகரில் ஐந்து சாலை, ஜவஹர் பஜார், கோவை சாலை, தின்னப்பா கார்னர் சாலை, திருச்சி சாலை, ரயில்வே ஸ்டேஷன் ஆகிய முக்கியமான சாலைகளில், 18 மணி நேரம் வாகனங்கள் சென்று வருகின்றன. கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், புதிய பஸ் ஸ்டாண்டுக்கு அடிக்கடி அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன.
மேலும், கரூர் நகரப்பகுதிகளில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் மனோகரா கார்னரை சுற்றியே உள்ளது. இதனால், வாகன நெரிசல் உள்ள பகுதியாக கரூர் நகரம் உள்ளது.
இந்நிலையில், காலை முதல் இரவு கரூர் நகரப்பகுதிகளில் மாடுகள், ஆடுகள் தாராளமாக உலா வருகின்றன. இதனால், கரூர் நகரில் அடிக்கடி கால்நடைகளால், போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது. குறிப்பாக, டூவீலர்களில் செல்வோர் கால்நடைகள் திடீரென குறுக்கே, ஓடுவதால் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, கரூர் நகரில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.