/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம் எம்.பி.,-எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
/
வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம் எம்.பி.,-எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம் எம்.பி.,-எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம் எம்.பி.,-எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
ADDED : அக் 19, 2024 02:11 AM
கரூர்: கரூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், எம்.பி., ஜோதிமணி தலைமையில் நடந்தது.
அதில், பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்-டுள்ள வீடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகள், துாய்மை பாரதம் திட்-டத்தின் கீழ், சுகாதார வளாகங்கள், பிரதமரின் கிராம சாலை திட்-டங்கள், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செய்யப்பட்-டுள்ள பணிகள், ஜல்ஜீவன் திட்டம், ஜீவன் மெஷின் திட்டம், பயிர் காப்பீடு திட்டம், அன்னபூர்ணா திட்டம் உள்ளிட்ட, பல்-வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில், கலெக்டர் தங்கவேல், பெரம்பலுார் எம்.பி., அருண்-நேரு, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீ லேகா, மாநகராட்சி கமிஷனர் சுதா, ஆர்.டி.ஓ., முகமது பைசல் உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.