/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.78.63 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்
/
ரூ.78.63 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்
ADDED : ஆக 12, 2024 06:53 AM
கரூர் : கரூர் மாவட்டம், கடவூர் அருகே மேலப்பகுதி மற்றும் தரகம்பட்டி பஞ்., பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், 78.63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.அதில், சீத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 32.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டிமுடிக்கப்பட்ட பணியையும், களத்துப்பட்டியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 1.54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மண் வரப்பு அமைக்கப்பட்ட பணியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கருச்சிப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 7.99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொது மயானம் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார், முத்துக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.