/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் ரூ.4.09 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு
/
கரூரில் ரூ.4.09 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு
கரூரில் ரூ.4.09 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு
கரூரில் ரூ.4.09 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு
ADDED : ஜன 05, 2025 07:22 AM
கரூர்: அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். திருக்காடுதுறை பஞ்., ஆலமரத்துமேட்டில், 42 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட நீர் உந்து நிலையத்தையும், அத்-திப்பாளையம் பஞ்., வளையாபாளையத்தில், 20.13 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டடத்தையும் திறந்து வைத்தார். மேலும், வெள்ளியம்பா-ளையம் காலனியில். 21 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய கூடம், எலவனுார் பஞ்.,ல், 23.57 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்-டப்பட்ட பஞ்., அலுவலக கட்டடத்தையும் என மொத்தம், 4.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீ-லேகா தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்-தரி உள்பட பலர் பங்கேற்றனர்.